நாகர்கோவில் :  பணம் நகையை அபகரித்த மகன்

நாகர்கோவில் :  பணம் நகையை அபகரித்த மகன்
X
கலெக்டரிடம் பெற்றோர் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரத்தை சேர்ந்த சுயம்பு அவரது மனைவி சிவத்திகனி ( வயது 85 ) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகன் ராஜன் மட்டும் ஊரில் வசித்து வருகிறார் . தந்தைக்கு வயது முதிர்ச்சி காரணமாக தாயயை கவனிக்க முடியாததால் மூத்த மகன் ராஜன் நான் இருவரையும் பார்த்து கொள்கிறேன் என கூறி தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார். சில மாதங்கள் தாயை கவனித்து கொண்ட மகன் ராஜன் தாய் பெயரில் இருந்த 72 சென்ட் நிலத்தை மிரட்டி கொட்டாரம் பத்திர பதிவு அலுவலகம் மூலம் தன் பெயருக்கு எழுதி வாங்கி விட்டு, தாயின் கழுத்தில் கிடந்து 5 அரை பவுன் தங்க செயின், வங்கியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றையும் மீரட்டி எடுத்து விட்டதாக கூறி தள்ளாடும் வயதில் தாய், தந்தை இருவரும் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் .        இவர்களுக்கு நினைவாற்றலும் பேச்சாற்றலும் குறைந்ததால் மீதமுள்ள இரண்டு மகன்களிடம் தகவல் கூற முடியாமல் ஆகி விட்டனர் . அவர்களும் அண்ணன் வீட்டில் தானே தாய் இருக்கிறாள் என நினைத்து தொடர்பு இல்லாமல் இருந்து விட்டனர். தற்போது மூத்த மகன் ராஜன் வீட்டில் இருந்து வெளியேறி தனி வீட்டில் வசிக்க வந்த பின்பு தான் மற்ற மகன்களுக்கு விவரம் தெரிய வந்தது. இது சம்மந்தமாக இரண்டு மகன்களும் மூத்த மகன் ராஜனிடம் கேட்டதற்கு உன்னால் முடிந்ததை பார் என முத்த மகன் ராஜன் கூறியதை தொடர்ந்து இந்த புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.       பெற்ற மகனே நோய்வாய் பட்ட தாயை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story