ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு
X
திருவட்டாறு
திருவட்டாறு அருகே அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (40). இவர் திருவட்டார் பஸ் நிலையம்,  குலசேகரம், தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இவருக்கு சொந்தமான மாலை வேளை பாஸ்ட் புட் கடைகள் உள்ளன. இந்த கடைகள் தினசரி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுத்தப்படுகிறது.       இதில் திருவட்டார் கடையில்  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தினசரி இரவு அனைத்து கடைகளுக்கும் சென்று வசூல் பணத்தை மாரியப்பன் வாங்கி செல்வது வழக்கம்.      அதன்படி நேற்று வசூலான பணத்தை வாங்குவதற்காக மாரியப்பன் சென்றுள்ளார். அப்போது இரவு சுமார் 9 மணியளவில் கடையில் வேலை பார்த்த ஊழியர் பாஸ்கருக்கும் மாரியப்பனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாஸ்கர் மது போதையில் இருந்துள்ளார்.       இந்த நேரத்தில் கடையில் இறைச்சி வெட்ட வைத்திருந்த கத்தியை  எடுத்து கடையின் உரிமையாளர் மாரியப்பனின் கையில் பாஸ்கர் வெட்டி விட்டு  தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்தவனா  அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு  சேர்த்தனர். இது தொடர்பாக மாரியப்பன் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  கடை ஊழியர் பாஸ்கரை தேடி வருகின்றனர்.
Next Story