குமரியில் பெய்த மழையால் குறைந்த வெப்பம்

X

பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று திடீரென மழை பொழிந்து வருவது இதமளித்து வருகிறது.கோடை வெயிலால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் முதல் குமரி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பொழிந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து மிதமான தட்பவெப்பம் நிலவியது. விவசாய நிலங்களில் தென்னை, வாழை மற்றும் தோட்டப் பயிர்கள் கருகிய நிலையில் இந்த மழை ஓரளவு விவசாயிகளுக்கு கை கொடுத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 13 மிமீ., மழை பெய்தது. குருந்தன்கோடு, சிற்றாறு 2 ஆகிய இடங்களில 12 மிமீ., மழை பதிவானது. சாரல் மழைக்கு மத்தியில் திற்பரப்பு அருவியில் கோடைக்கு இதமாக மிதமாக கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை நீர்மட்டம் 29 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25 அடியாகவும், சிற்றாறு அணை நீர்மட்டம் 2.70 அடியாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையால் குமரி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழை கைகொடுக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
Next Story