நி​ராகரிக்​கப்​பட்ட உயர் பென்​ஷன் விண்​ணப்​பங்​களை வருங்​கால வைப்​புநிதி நிறு​வனம் மறு​பரிசீலனை செய்ய கோ-ஆப்​டெக்ஸ் ஊழியர் சங்​கம் கோரிக்கை

நி​ராகரிக்​கப்​பட்ட உயர் பென்​ஷன் விண்​ணப்​பங்​களை வருங்​கால வைப்​புநிதி நிறு​வனம் மறு​பரிசீலனை செய்ய கோ-ஆப்​டெக்ஸ் ஊழியர் சங்​கம் கோரிக்கை
X
நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை ராயப்பேட்டை வருங்கால வைப்புநிதி நிறுவனம் மறுபரிசீலனை செய்து, உயர் பென்ஷன் தொகை கிடைக்க வழிவகை வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நி​ராகரிக்​கப்​பட்ட உயர் பென்​ஷன் விண்​ணப்​பங்​களை வருங்​கால வைப்​புநிதி நிறு​வனம் மறு​பரிசீலனை செய்ய கோ-ஆப்​டெக்ஸ் ஊழியர் சங்​கம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை ராயப்பேட்டை வருங்கால வைப்புநிதி நிறுவனம் மறுபரிசீலனை செய்து, உயர் பென்ஷன் தொகை கிடைக்க வழிவகை வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.விஸ்வநாதன் கூறியுள்ளதாவது: உச்சநீதிமன்றம் 2022-ம் ஆண்டு நவ.4-ம் தேதியிட்ட உத்தரவின்படி, இபிஎஸ்- 95 திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற ஊழியர்கள் உயர் பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதி-க்கு பிறகு, பணியில் இருக்கும் ஊழியர்களும், ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமும் இணைந்து கூட்டு விருப்பம் ( ஜாய்ன்ட் ஆப்சன்) வழங்கியுள்ளார்கள். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதிக்கு பிறகு, பணி ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் விண்ணப்பங்களை பெற்று அதனை முறைப்படி, சென்னை ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 279 விண்ணப்பங்களையும் ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிராகரிப்பு செய்ததாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவித்துள்ளது. ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வாகத்துக்கோ, உறுப்பினர்களுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் உயர் பென்ஷன் தொகை விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்தது உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானதாகும். . உச்சநீதிமன்றம் உயர் பென்ஷன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யாத நிலையில், ராயப்பேட்டை வருங்கால வைப்புநிதி நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் உயர் பென்ஷன் விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யப்பட்டதால், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களும், பணியில் இருக்கும் ஊழியர்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை ராயப்பேட்டை வருங்கால வைப்புநிதி நிறுவனம் மறுபரிசீலனை செய்து ஊழியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, உயர் பென்ஷன் தொகை கிடைப்பதற்கு வழிவகை வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story