மோகனூரில் அனுமதியின்றி மண் அள்ளிய விவசாயி மீது வழக்கு

X

மோகனூரில் அனுமதியின்றி மண் அள்ளிய விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பரமத்தி வேலூர் , ஏப்.5- நாமக்கல் மாவட்டம் மோகனுார் தாலுகா வளையபட்டி அடுத்த ஆண்டாபுரத்தில் சுப்ரமணியம் என்பவர் பட்டா நிலத்தில் மணல் அள்ளுவதாக கனிம வளத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் கனிமவளத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு அனுமதியின்றி பட்டா நிலத்தில் விவசாயி சுப்ரமணி என்பவர் மண் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story