சர்வதேச விளையாட்டு தினம் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் ராசிபுரத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி..

சர்வதேச விளையாட்டு தினம் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் ராசிபுரத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி..
X
சர்வதேச விளையாட்டு தினம் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் ராசிபுரத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி..
சர்வதேச விளையாட்டு தினம் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் ராசிபுரத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி.. போட்டியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.போட்டியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியும் மாவட்ட தடகள சங்கமம் இணைந்து சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 6. ஞாயிற்றுக்கிழமை உடல் திறன் குறித்தும், உடல் உறுதி குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. சர்வதேச விளையாட்டு தினம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் முன்னாள் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியானது முத்துக்காளிப்பட்டி பகுதியில் இருந்து தொடங்கி ATCடிப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை மற்றும் சேலம் சாலை,ராசிபுரம் நகர் பகுதி என பல்வேறு சாலைகளின் வழியாக சென்றது. மாரத்தான் போட்டியில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்,சிறுமிகள் முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெரியவர்கள் வரை என 12 பிரிவுகளின் கீழ் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை குறித்து விழிப்புணர்வு செய்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 2 லட்ச ரூபாய் வரை மதிப்பிலான பரிசு தொகை மற்றும் பதக்கம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில் சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடல் ஆரோக்கியம்,வலிமை, உடல் கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என கூறி சிறப்பு உரையாற்றினார்.. இதில் நாமக்கல் எம்பி வி எஸ் மாதேஸ்வரன், முன்னாள் எம்பி ஏ கே பி சின்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாட்டை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். கார்த்திகேயன், சிறப்பாக செய்துள்ளார்.
Next Story