பரமத்தி வேலூரில் தி.மு.க. பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்.

X

தி.மு.க. பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்.
பரமத்தி வேலூர், ஏப். 6: பரமத்திவேலூர், ஏப்.6 பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட் பட்ட பரமத்தி வேலூர் பேரூர் திமுக வாக்கு சாவடி பாக முகவர்களுக்கான ஆலோ சனை கூட்டம் வேலூர் நகர வர்த்தகர் சங்க திரு மணமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட் டத்தில் வேலூர் பேரூர் கழக அவை தலைவர்மதி யழகன் அனைவரையும் வரவேற்றார். வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் தலைமை வகித் தார். இதில் கபிலர்மலை ஒன்றிய கழக செயலாளர் கே.கே.சண்முகம், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், பேரூர் துணை செயலாளர் செந்தில்நாதன், மோகனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகம், நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் வீ.ஜி.அன்பழகன், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மூர்த்தி (67) முரளி,நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணிதுணை அமைப்பாளர் நவலடி ராஜா,பூக் கடை சுந்தர், பாண்டமங்கலம் பேரூர் கழக செயலாளர் பெருமாள் (எ) முருகவேல், ஐடி விங் பரமத்திவேலூர் தொகுதி ஒருங்கிணைப் பாளர் பாண்டவர் எஸ். லோகேஸ்வரன், அரசு வழக்கறிஞர் பாலகிருஷ் ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே எஸ் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப் போது வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கட்சியினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார் ள். தகவல் தொழில் நுட்ப அணி சேர்ந்த பொறுப்பாளர்கள் திமுக அரசின் சாதனைகளை வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பல்வேறு சோசியல் மீடியாக்கல் மூலம் பொதுகளுக்கு கொண்டு செல்ல பாடுபட வேண்டும் அதேபோல் வாக்குச்சாவடி முகவர்கள் திமுக அரசு கொண்டுவந்துள்ள நல்ல திட்டங்கள் குறித்தும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும்ரும் நலத்திட்டதிட்ட உதவி கள் குறித்தும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூற வேண்டும்.என வலியுறுத்தினார்கள். இக் கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள், வேலூர் பேரூர்கழகத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள்,தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story