நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் நினைவுதினம் அனுசரிப்பு !

அதிமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் நாமக்கல் ஸ்ரீ தேவி P.S.மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாமக்கல்லில் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் நாமக்கல் ஸ்ரீ தேவி P.S.மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நாமக்கல்லை அடுத்த வேட்டாம்பாடியில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது முழு உருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. சிலம்பொலி செல்லப்பனின் 6 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அஇஅதிமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ தேவி P.S.மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சதாசிவம், சுதாகர்,மயில் கே.பழனிவேல், பூங்கோதை செல்லதுரை, சித்தார்த்தன் , காவேரி பீட்ஸ் வெங்கடாஜலம், செல்வராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story