பரமத்திவேலூர் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ. சேகர் பேச்சு.

பரமத்திவேலூர் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ. சேகர்  பேச்சு.
X
பரமத்திவேலூர் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ. சேகர் பேச்சு.
பரமத்திவேலூர், ஏப்.6- பரமத்தி வேலூர் என்ஜினீயர் சேகர் எம். எல்.ஏ., சட்டமன்றத்தில் பேசியதாவது:- பரமத்திவேலூர் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் அதிகமாக வரும் காலங்களில் உபரிநீரைக் கொண்டு காவேரி திருமணி முத்தாற்றில் இணைக்கும் திட்டத்தை இந்த அரசு கொண்டுவர வேண்டும். மோகனூர் ஒன்றியத்தில் பரமத்தி வேலூர் தொகுதியில் 10 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. இதற்கு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும். பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம் மற்றும் 5 வெங்கரை ஆகிய பேரூராட்சிகளில் அங்கன்வாடி கட்டங்களுக்கு சொந்தகட்டங்கள் கட்டி கொடுக்க.வேண்டும். பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3 ஆயிரத்து 600 சதுர அடியில் நூலகம் ஒன்று இயங்கி வருகின்றது அதற்கு புதிய கட்டடம் கட்டி கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான மருத்துவ படிப்பிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூல மாகத்தான் செல்கின்றனர். நீட் விதிவிலக்கு வரும் வரை அரசு பள்ளியிலுள்ள மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பிற்கும் மற்ற தொழில் படிப்பிற்கும் போட்டி தேர்வுக்கு சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளித்திடும் நீட் வகுப்பு மையம் ஒன்றை நாமக்கல் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும். பரமத்தி வேலூர் பேரூராட்சியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். 'ஜேடர்பாளையம், வேலூர், பரமத்தி பேரூராட்சியில் பழைய பயணியர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும். கபிலர் மலையிலுள்ள தேர் வீதி பகுதிகளுக்கு நிலத்தடி புதைவிடங்கள் யூஜி கேபிள் அமைத்து வேண்டும். கொடுக்க ராஜா வாய்க்காலின் குறுக்கே குமாரபாளையம் ஊராட்சியில் புதிய பாலம் அமைக்க வேண்டும். எலச்சிப்பாளையம் ஒன்றியம் லத்துவாடி ஊராட்சிப் பகுதிகளையும் திருமணிமுத்தாற்றின் அடுத்துள்ள பகுதிகளை இணைப்பதற்கான குமராண்டிபாளையத்தில் லத்துவாடி ஆற்றின் குறுக்கே ஓர் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். கபிலர்மலை ஒன்றியம் இருக்கூர் கிராமம் பஞ்சபாளையத் தில் புளியம்பட்டி மற்றும் வசந்தபுரம் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலுப்புலி ஏரி, முசிறி ஏரி, இடும்பன் குளம் ஏரி ஆகிய ஏரிகளை தூர் வாரித்தர வேண்டும் திருமணி முத்தாற்றில் பக்கவாட்டில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் அந்த ஆற்றில் கரையைச் சுத்தப்படுத்திக் கொடுத்திட வேண்டும். முதியோர்களு க்கான உதவி தொகையை முறையாக வழங்கப்பட வேண்டும் என கேட்டு க்கொண்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர்கள் அதற்கான அரசு குழுவை அமைத்து ஆய்வு செய்து விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினர்.
Next Story