பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா: மாநில துணைத்தலைவர் டாக்டர் கே. பி.ராமலிங்கம், கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்..

X

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா: மாநில துணைத்தலைவர் டாக்டர் கே. பி.ராமலிங்கம், கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்..
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே பாஜக ஸ்தாபன தினத்தின் உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளின் நலன் விரும்பியாக திகழ்கிறார் என்றும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம், நாமகிரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) கொண்டாடப்பட்டது. அதன்படி, இராசிபுரம், நாமகிரிப்பேட்டை வெள்ளிச்சந்தை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர் K.P. இராமலிங்கம், கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் K.P. சரவணன் உடன் இணைந்து, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் கட்சித் தொண்டர்கள் தங்கள் இல்லங்களில் பாஜக கொடியினை ஏற்றுவதற்காக , அவர்களுக்கு கட்சிக் கொடிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நாமகிரிப்பேட்டை பாஜகவின் ஒன்றிய அலுவலகத்தை டாக்டர் K.P. இராமலிங்கம் திறந்து வைத்து, பாஜக ஸ்தாபன தின விழாவின் ஒரு பகுதியாக அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர், பாஜக ஸ்தாபன தின விழா இன்று எழுச்சியோடு நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றன. சேலம் பெருங்கோட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி இயக்கத்தின் தொடக்க நாளான இன்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். இரயில் ஓட்டமும் நடைபெறுகிறது. தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து நல்லாட்சி நடத்தி வரும் பாஜக இத்தனை ஆண்டு காலம் பல்வேறு கட்டமைப்புகளை தேசத்திற்காக உருவாக்கி இருக்கிறது. பாஜக அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால்தான் தேசம் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த வளர்ச்சியை தமிழகமும் பெற வேண்டும். ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சியை அகற்றி, தேச மக்களின் நலனுக்காக உழைக்கின்ற ஆட்சி அமைய வேண்டும். தேசமும் தெய்வீகமும் உன்னதமான நிலை என்ற ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க, திட்டமிட்டு பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தீய சக்தியாக இருக்கின்ற திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. தேச நலன் போல தமிழக நலனும் முக்கியம் என்பதை தொடர்ந்து நமது மாநில தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தீய சக்தியை திமுகவை அகற்ற வேண்டும் என்பதே இந்த ஸ்தாபன தினத்தில் உறுதி மொழியாக உள்ளது. திமுகவுக்கு எதிராக இருக்கின்ற அனைத்து அரசியல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து பாஜக முன்னின்று இணைந்து பணியாற்றுவோம். அதன் தொடக்கமாகத்தான் இன்றைய ஸ்தாபன தினத்தில் சபதம் இருக்கிறோம். தீய சக்தியை அகற்றுவதற்காக ஒன்றுபடுவோம், உழைப்போம். தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை நிறுவுவோம் என்பதுதான் எங்களது சூளுரை ஆகும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த K.P. இராமலிங்கம், பாரத பிரதமருக்கு இணையாக செயல்படக்கூடிய நாட்டின் உள்துறை அமைச்சரை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், கொலை கொள்ளை, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் காமவெறி செயல், டாஸ்மாக் ஊழல், செல்வப் பெருந்தகையின் சகோதரர் ஊழல், பல்வேறு சட்ட ஒழுங்கு சீர்கேட்டை தொகுத்து அமித்ஷா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தீய சக்தியாக இருக்கக்கூடிய திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடியார் கூறியுள்ளார். பெரும் அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசத்தான் செய்வார்கள். ஒரே நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டின் தீய சக்தியாக இருக்கக்கூடிய ஊழல் ஆட்சி நடத்தி வரும் திமுகவை அகற்றுவதுதான் நோக்கமாக இருக்கும். செங்கோட்டையன், வேலுமணி, இன்று பாரத பிரதமர்களை சந்திப்பவர்கள் என யார் சந்தித்தாலும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவதற்கு எப்படி? ஒன்று கூடுவது என்பதுதான் நோக்கம். வேறு கொள்கைகள் கொண்டிருந்தாலும், தீய சக்தி திமுகவை அகற்றுவது அதற்காக வியூகத்தை வகுப்பது யாரெல்லாம் இதற்கு ஒன்று சேர்வது என்ற நோக்கத்தோடு யாரெல்லாம் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்ற முடிவை பாஜக எடுத்துள்ளது. அமித்ஷா சந்திப்பு இதுகுறித்து கூட முடிவெடுக்கப்பட்டிருக்கலாம் என்றார். நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவதற்காக, வளர்ந்த பாரதத்தோடு தமிழகத்தை இணைப்பதற்காக 2047 வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான முயற்சியை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி கடுமையாக உழைத்துக் கொண்டு வருகிறார். உலகமெங்கும் பயணம் மேற்கொண்டு, வருகிறார். சிறிய நாடு என்று தானே என்று கூறாமல் இலங்கைக்கு 38,000 கோடி இந்தியா வழங்கியது, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்காக உறுதுணையாக இருக்கிறார். இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறார். உலகத் தலைவராக திகழ்ந்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிற்கு பாஜக வரவேண்டும் என்ற எண்ணங்கள், லட்சியங்கள் நிறைவேறும் வகையில் தேசத்துடன் சேர்ந்து தமிழகம் வளர்ந்தால்தான் நேர்மையான மாநிலமாக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. வக்ஃபு வாரிய சட்டம் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த துணைத்தலைவர் கே பி ராமலிங்கம், இந்த சட்டத்திற்கு எதிராக தோன்றியுள்ள சிறு சிறு எதிர்ப்புகள் எல்லாம் தகர்த்தெறியப்படும். வக்பு வாரிய சட்டத்தை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில், ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள பெரும்பான்மையானவர்கள் இதனை ஆதரிக்கிறார்கள். எல்லோருக்கும் சமநிலையில் சமூக நீதி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். ஒரு ஆட்சி நடந்தபோது, திடீரென்று அபகரிக்கப்பட்ட சொத்துக்களை, பின்னாளில் ஒரு வாரியம் அமைத்துக் கொண்டதால், அவர்கள் தங்களின் சொந்த சொத்துக்கள் என கூற முடியாது. இந்திராகாந்தி ஆட்சி காலத்தில், அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள, பிரம்மானந்த ரெட்டி, காமராஜர், தர்பாலா சிங் போன்றவர்கள் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக செய்துள்ள தவறுகளை திருத்தி உள்ளோம். வக்பு வாரிய சட்ட திருத்ததை எதிர்ப்பவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் முட்டாள்கள் ஆவர். தேசத்திற்கான சட்டமாக வக்பு வாரிய திருத்தம் உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால்தான் இன்று அங்கு மாநில மக்கள் வளர்ச்சி பெறுகிறார்கள். ஆட்சியில் பங்கு பெறுகிறார்கள். அதேபோலத்தான் வக்பு வாரிய சட்ட திருத்தமும் அமைந்துள்ளது. வாக்கு அரசியல் செய்வதற்காகவே திமுகவினர் வக்பு வாரிய சட்டதை எதிர்த்து வருகின்றனர். பல்வேறு ஊழல்களில் திளைத்துள்ள அந்த கட்சிக்கு, மீண்டும் ஆட்சிக்கு வந்து ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். செந்தில் பாலாஜி போன்ற ஊழல் செய்துள்ளவர்கள் அமைச்சரவையில் உள்ளனர். அவர் பெயில் வாங்குவதற்கும் பணம் செலவு செய்துள்ளார். அவரது துறையில் மீண்டும் தவறு நடந்துள்ளது. அமலாக்கத்துறை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது என கூறியுள்ளது. எனவே, முதல்வர் , துணை முதல்வர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் மறைப்பதற்காகவே மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு, வக்uபு வாரியம் போன்ற பல எதிர்ப்புகளையும் வழக்குகளையும் போட்டு வருகின்றனர். ஆனால், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ள திமுக ஆட்சியாளர்கள், சிறைக்கு செல்வது உறுதி. பாஜக ஊழலை நிச்சயமாக அகற்றும். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவது எங்கள் பணியாகும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப வருங்காலத்தில் முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து 40 லட்சம் பேர் கையெழுத்து இட்டார்கள். சேலம் பெருங்கோட்டத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து உள்ளனர். வருகின்ற 19-ம் தேதி பாஜக மாநாடு ஓமலூரில் நடைபெற உள்ளது. 10 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட படிவங்களை அப்பொழுது நாம் கட்சித் தலைவரிடம் வழங்க உள்ளோம். நீட் தேர்வு எதிர்ப்பு தொடர்பாக முதல்வர் கூட்டி உள்ள அனைத்து கட்சி கூட்டம், டுபாக்கூர் கட்சிகளின் கூடாரமாகவே அமையும். திமுக அரசின் ஊழல் பணத்தை பங்கிடும் டுபாக்கூர் கட்சிகள் கூட்டமாகத்தான் அமையும். மணல், டாஸ்மாக், நெடுஞ்சாலை உள்ளிட்ட திமுக அரசு துறைகளில் ஊழல் மலிந்து கூட்டணி கட்சிகள் அவர்களிடமிருந்து ஊழல் பணத்தை பங்கிட்டு கொள்கிறார்கள் என பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன். நீட் தேர்வு தொடரும் என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு நளினி சிதம்பரத்தை அழைத்து, நீட் தொடர்பாக முதல்வர் தெளிவு பெற வேண்டும். முதல்வர் முதலில் தெளிய வேண்டும். நாட்டில் பல மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், திமுக எதிர்ப்பு என்ற நிலையில் மாணவர்களை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில், தனியார் பள்ளிகள் நோ அப்ஜக்ஷன் சான்றிதழ் பெறுவதற்கு, ஒரு அமைப்பினர் பள்ளிகளிடமிருந்து பணம் வசூல் செய்கின்றனர். இதனை திமுக அரசு தடுக்கத் தவறிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்தார். அவருக்கு புத்தி இருந்தது ஆதரித்தார். இப்போதியய முதல்வருக்கு புத்தி இல்லை அதனால் ஆதரிக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், பல மாநிலங்களில், பல நாட்களில், தேர்தல் நடைபெறுவதால் அதிக அளவில் நிதி சுமை ஏற்படுகிறது. பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிகளை கண்டு கொள்ளாமல், சாதாரண ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கின்றனர். இது போன்ற பிரச்சனைகள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என பாஜக கூறுகிறது. தேர்தல் முன்வைத்து பாஜக பட்ஜெட் போடுவது கிடையாது. மக்களின் நலனுக்காகவே பட்ஜெட் போடுகிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக திமுக பட்ஜெட் போடுகிறது. குடும்ப அரசியல் குடும்ப ஆட்சியை கொண்டு வரவே திமுக கருதுகிறது. பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவராக உங்களை கட்சி அறிவித்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த கே பி ராமலிங்கம், பாஜக தலைமை என்ன விரும்புகிறதோ அதனை செயல்படுத்தவே நாங்கள் உள்ளோம். இப்போது உள்ள தலைவர் மிகவும் சிறப்போடு செயல்பட்டு வருகிறார். ஒற்றுமையோடு கட்சியை தமிழகத்தில் திறம்பட நடத்தி வருகிறோம் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் நாமகிரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ராசிபுரம் நகரத் தலைவர் பி.வேலு, ராசிபுரம் நகர பொருளாளர் எம். கே. ராஜா, ராசிபுரம் நகர பொதுச்செயலாளர் எஸ். லோகநாதன், மணிகண்டன், குமார், ராசிபுரம் நகரச் செயலாளர் ஆர். வெங்கடேசன்,கலல்யாளர் பிரிவு மாவட்ட செயலாளர் ஆர் மணிவண்ணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் என். சித்ரா, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் த. விஜய சரஸ்வதி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் ஏ. எஸ். கார்த்தீஸ்வரன், முன்னாள் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் டி. சிவக்குமார், மற்றும் பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story