மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
X
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள பூங்கா சாலையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார்.
வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தைக் திரும்பப் பெற கோரியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மத்திய அரசு நிதியை வழங்கக் கோரியும் நாமக்கல்லில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள பூங்கா சாலையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நகர தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். தமிழகத்திற்கு கல்விக்காகவும், 100 நாள் வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிகளில் பிறமொழி திணிப்பை கைவிட வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன், லோகநாதன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்
Next Story