ராசிபுரம் ஒன்றியத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..

ராசிபுரம் ஒன்றியத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..
X
ராசிபுரம் ஒன்றியத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றம் ராசிபுரம் ஒன்றியத்தில் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஆணைக்கிணங்க கழக அமைப்பு செயலாளர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் பி. தங்கமணி அவர்களின் ஆலோசனையில் பிள்ளா நல்லூர் பேரூராட்சியில் 9 பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் குருசாமிபாளையம் செங்குந்த சமுதாயக்கூடம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான டாக்டர் வெ. சரோஜா அவர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு, ராசிபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் வேம்பு சேரன், மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி. சரவணன் , மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story