ராசிபுரம் அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்...

ராசிபுரம் அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன்  செலுத்தினார்...
X
ராசிபுரம் அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் பங்குனி மாதம் கடைசி வரம் திருவிழா நடைபெறுவது வழக்கம் முன்னதாக நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் ஆஞ்சநேயர் உற்சவர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாமகிரிப்பேட்டையில் இருந்து உற்சவர் ஊர்வலமாக புறப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு புஷ்ப பல்லாக்கத்தில் இருந்த ஆஞ்சநேயரை வழிபட்டு செய்து பல்லாக்கை துவக்கி வைத்தார். ஊர்வலமானது நாமகிரிப்பேட்டை பகுதியில் தொடங்கி ஆத்தூர் சாலை, தண்ணீர்பந்தல் காடு, கோரைக்காடு உள்ளிட்ட வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று இறுதியாக கோவிலை சென்றடைந்தது.பின்னர் பல்லாக்கில் வந்த ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்...
Next Story