ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் பச்சைத் தண்ணீர் ஊற்றி விளக்கு எரியும் அதிசய நிகழ்வு...

ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் பச்சைத் தண்ணீர் ஊற்றி விளக்கு எரியும் அதிசய நிகழ்வு...
X
ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் பச்சைத் தண்ணீர் ஊற்றி விளக்கு எரியும் அதிசய நிகழ்வு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டாங்குட்டை பகுதியில் பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் ஆனது அமைந்துள்ளது.இங்கு வருடம் தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது.கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் பூசாரி விளக்கு எரிய வைப்பதற்காக எண்ணெய் கேட்டதாகவும், அப்போது தர்மகர்த்தா சாமி உண்மை என்றால் விளக்கில் தண்ணீர் ஊற்றி பற்ற வையுங்கள் என கூறியதாகவும் உடனே பூசாரி குளித்துவிட்டு அதிகாலையில் கோவில் சன்னதியில் பச்சை தண்ணீர் ஊற்றி விளக்கு பற்ற வைத்ததாகவும் அப்போது விளக்கு கொழுந்துவிட்டு எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் காலம் காலமாக இம்முறை பின்பற்றப்பட்டு வருவதால் பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றதை அடுத்து கோவிலில் தண்ணீர் ஊற்றி விளக்கு எரியும் அதிசய நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு அதிசய நிகழ்வை கண்டு, சாமி தரிசனம் செய்து சென்றனர்..
Next Story