பரமத்திவேலூரில் சூறை காற்றில் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

X

பரமத்திவேலூர் வட்டாரத்தில் சூறை காற்றில் முறிந்த வாழை மரங்கள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
பரமத்திவேலூர், ஏப்.8- பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். காலை நேரங்களில் வெயிலின் தாக்கத்தாலும், இரவு நேரங்களில் வெப்பத்தாலும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்துள்ள அறுவடைக்கு தயாராக உள்ள வாழை மரங்கள் ஆங்காங்கே வாழை குலை யுடன் ஒடிந்து சாய்ந்தது. இதே போல் வெற்றிலை கொடிக்காலும் காற்றில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து அவர்க ளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரசு உரிய இழப் பீடு வழங்கவேண்டும் எனவாழை மற்றும் வெற்றிலை கொடிக் கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல் வேறு இடங்களில் சாலையோரங்களில் இருந்து மரங்களும் ஒடிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் மின் வினியோகம் ஆங்காங்கே பாதிக்கப்பட்டது.
Next Story