பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்.

பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்.
X
பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பரமத்தி வேலூர்,ஏப்.8: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த பாலப்பட்டியில் உள்ளகதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் 4-ம் ஆண்டு பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு மூலவர், உற்சவர்விநாயகர்,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.கோவில் முன்பு யாகம்,நடந்தது இதையடுத்து கொடியை கோவில்சுற்றி வந்த பின்னர் கோவில் முன்பிருந்த கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. பின் உற்சவர் முருகப்பெருமான் கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கோ பூஜையுடன் தொடங்கி பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது . வியாழக்கிழமை பக்தர்கள் காவிரி ஆற்றில் சென்று தீர்த்த குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. வருகிற 11-ந்தேதி தீர்த்த வாரி பூஜை, வள்ளி தேவசேனா திருக்கல்யாண உற்சவம், சாமி மயில்வாகன அலங்காரம் ஊஞ்சல் சேவை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
Next Story