ராசிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மாநாடு குறித்து நகர பாமக பொதுக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

X

ராசிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மாநாடு குறித்து நகர பாமக பொதுக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நகர பாமக பொதுக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராசிபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பொதுகுழு அரிமா அ.மோகன்ராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாமக்கல் மாவட்ட மாநாட்டு பொறுப்பாளர் மற்றும் மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க அய்யாசாமி. கிழக்கு மாவட்ட மாநாட்டு பொறுப்பாளர் பசுமை தாயகத்தின் மாநில செயலாளர் வெங்கடாசலம் , மாவட்ட செயலாளர் ஒ.பி.பொன்னுசாமி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ராசிபுரம் நகர பகுதியில் இருந்து சுமார் 1000 மேற்பட்டோர் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு கலந்து கொள்வார் எனவும், இதில் பேருந்து, மினி பேருந்து, கார் என சுமார் 20.க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருவார்கள் எனவும், மாநாட்டிற்கான துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கி மாநாட்டிற்கு அனைவரையும் அழைத்து வருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதில் தங்க அய்யாசாமி, அவர்கள் பேசும்போது மே 11ஆம் தேதி முழு சித்திரை நிலவு மாநாட்டு முடிந்தவுடன் அனைத்து கட்சியினரும் நமது பாமக நோக்கி வருவார்கள் எனவும், அவர் தெரிவித்தார். சிறப்பு வாய்ந்த இந்த மாநாடு வெற்றி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில். மாவட்ட செயலாளர் ஓ.பி. பொன்னுசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மோகன்ராஜ், பன்னீர்செல்வம், வன்னியரசு, வன்னியர் சங்க நகர செயலாளர் மாரிமுத்து, மற்றும் வாஞ்சிநாதன் ,நகர உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story