பங்குனி உத்திர காவடியுடன் பாத யாத்திரை துவக்கம்

X

குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர காவடியுடன் பாத யாத்திரை துவங்கியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர காவடியுடன் பாத யாத்திரை துவங்கியது. ஆண்டுதோறும் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையம், வீ. மேட்டூர், நல்லாம்பாளையம், சின்னாயக்காடு, சத்யா நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், பழனிக்கு பாதயாத்திரையாக காவடியுடன் சென்று, முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வருவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்.11ல் வருவதையொட்டி, நேற்று இப்பகுதி முருக பக்தர்கள், காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பாதயாத்திரை துவக்கினர். இவர்கள் வெள்ளிகிழமை நாளில் பழனி முருகன் கோவிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி வருவார்கள். இவர்களை ஊர் பொதுமக்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
Next Story