ராமநாதபுரம் தென்னை விவசாயம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஅரசுக்கு அனுப்பி வைத்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்கள் முழுவதும் அதிகளவு தேங்காய் உற்பத்தி ஆகிறது இதனைப் பயன்படுத்தி தமிழக அரசு அனைத்து அரசு நியாய விலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் விநியோகம் செய்யவும் ராமநாதபுரத்தில் தென்னை வணிக வளாகம் அமைக்க கேட்டுக் கொண்டபடி சக்கரக்கோட்டையில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து அரசாணை எண் வழங்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட ஒழுங்குமுறை வேளாண் விற்பனை மையத்தில் ஒப்படைக்க ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த இடத்தில் தென்னை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேங்காய்களை நமது சங்கம் சார்பாக நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்து தென்னை விவசாயம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு சார்பாக தேவையான கட்டுமான பணிகளை செய்து தருமாறு வலியுறுத்தியும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தென்னை விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் அப்துல் முனாப், செயலாளர் மணிமாதவன், பொருளாளர் மோகன், கௌரவ ஆலோசகர் செல்லத்துரை அப்துல்லா, துணைத் தலைவர் கதிரேசன் துணைச் செயலாளர் தங்கச்சாமி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னாள் ராணுவம் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story