ராமநாதபுரம் பங்குனி உத்திர நிறைவு விழா நடைபெற்றது

பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவுநாளில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வீதிவுலா நடைபெற்றது
ராமநாதபுரம் ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோவில் 85-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவுநாளில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வீதிவுலா நடைபெற்றது இதில் சிலம்பொலி சிலம்பப் பள்ளியின் சார்பில் ஒயிலாட்டம் கரகாட்டம் மரக்காலாட்டம் சிலம்பாட்டம் கருப்புகாளி சிகப்புகாளி முருகன் மீனாட்சி கருப்பசாமி வேடம் அணிந்து வீதிவிழாவில் கலந்து கொண்டோம். நிகழ்ச்சியில் கரகாட்டம் ஆசிரியர் பாண்டியம்மாள் ஒயிலாட்டம் ஆசிரியர் .இராமகிருஷ்ணன் சிலம்பாட்ட ஆசிரியர்கள் .ஆ.தனசேகரன் லோ.ஆகாஷ் பாண்டி ,துர்காதேவி மற்றும் லோகசுப்பிரமணியன் நிகழ்ச்சியை கோவில் தர்மகர்த்தா ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஏராளமான ஆன்மீக பொதுமக்கள் வீதி உலாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story