ராமநாதபுரம் நீர்நோர் பந்தல் திறப்பு


மாவட்டகாவல்கண்காணிப்பாளர் சந்தீஷ்ஆயுதப்படைமைதானம்முன்பு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
ராம நாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பஞ் சாயத்தில் உள்ள சேதுபதி நகரில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளது. இங்கு கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள் ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மாவட்ட அளவிலான முதன்மை அலுவலகங்கள் உள்ளது. இங்கு வேலை நாட்க ளில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மனு அளித்தல், அரசு உதவிகளை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல் கின்றனர். இதுபோன்று அதிகாரிகள் முதல் அலுவ லர்கள், போலீசார், ஊழி யர்கள் என அனைத்து தரப்பினரும் வந்து செல் கின்றனர். இந்நிலையில் ஒருங்கி ணைந்த கலெக்டர் அலு வலகம் வரும் பொதுமக் கள் கேணிக்கரை காவல் நிலையம் எதிரே உள்ள ஆயுதப்படை மைதான பஸ் நிலையத்தை பயன்ப டுத்தி வருகின்றனர். தற் போது கோடைக்காலம் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானம் பகுதியில் நீர்,மோர்பந்தல் அமைக்கப்பட்டு, அதனை காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் திறந்து வைத்தார். அப்போது அங்கு வந்த பொதுமக் களுக்கு மோர், பழரசம், இளநீர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங் கினார்.
Next Story