ராமநாதபுரம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிமறுப்பு

நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தவும், மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்: செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தவும், மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்: செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுப்புராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகளை, மறுசீரமைப்பு செய்யவும், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது மக்களுக்கு அழைப்பு கொடுக்காமல் நகர் மன்ற உறுப்பினர்களை மட்டும் அழைத்திருப்பதாகவும், மக்கள் கருத்துகளை சொல்ல விடாமல் தடுப்பதாக கூறி அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை செய்தியாளர்கள் செய்தி சேகரித்த போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 33 வார்டுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், காவிரி கூட்டு குடிநீர் நகராட்சி நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊரணிகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்து வந்த நிலையில் காலப்போக்கில் அவைகள் அனைத்தும் மறைந்து தற்போது 23 நீர்நிலைகள் மட்டுமே உள்ளது. இந்த நீர் நிலைகளை பாதுகாக்கவும், மறுசீரமைப்பு செய்து மேம்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி ஆணையர் ஏற்பாட்டில் ராமநாதபுரம் ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. கருத்து கேட்பு கூட்டத்திற்கு ராமநாதபுரம் நகரமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சிலர் முந்தைய காலங்களில் இருந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போனதாகவும் அதனை மீட்பதற்கு நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினர். தற்போதுள்ள நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக ராமநாதபுரம் நகராட்சி சார்பில் மக்களை சென்றடையும் அளவில் விளம்பரங்கள் ஏன் செய்யப்படவில்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில மக்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கருத்து கேட்டு கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளவில்லை நகர் மன்ற உறுப்பினர்களை அதிகமாக கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்கள் தெரிவித்தனர். இதனால் நகர்மன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாக பேசிக் கொண்டனர். இதனை செய்தியாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் தெரிவித்து செய்தியாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story