ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X

பாஜக அரசை கண்டித்து அரன்மனை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பாஜக அரசை கண்டித்து அரன்மனை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தி எம்பி ஆகியோர் மீது அமலாக்கத்துறை மூலம் பழிவாங்கும் எண்ணத்துடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரண்மனை முன்பு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர்கள் அடையார் பாஸ்கரன், ஆனந்த குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் காமராஜ், துல்கீப் கான், வட்டாரத்தலைவர் காருகுடி சேகர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தி;ல ஈடுபட்டனர்.
Next Story