ராணிப்பேட்டையில் கோடைகால இலவச பயிற்சி முகாம்!

ராணிப்பேட்டையில் கோடைகால இலவச பயிற்சி முகாம்!
X
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டையில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வருகிற 25-ந்தேதி முதல் மே 15-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் தட கள பயிற்சியும், ஆற்காடு ஏ.வி.எஸ். கைப்பந்து விளையாட்டு திடலில் கையுந்து பந்து பயிற்சியும், கலவை ஹிட்பிட் குத்து சண்டை பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை பயிற்சியும் நடக் கிறது. புளியங்கண்ணு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கபடி விளையாட்டுக்கான பயிற்சியும், ஷாலிமார் இறகுப்பந்து விளையாட்டு திடலில் இறகுப்பந்து பயிற்சியும் நடக்கிறது. இப்பயிற்சி முகாம் காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரையும், மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரையும் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து உணவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இக்கோடைகால பயிற்சி முகாம் பற்றிய சந்தேகங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார்.
Next Story