சேலத்தில், நாளை கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

X

கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது
சேலம் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக கியாஸ் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், கியாஸ் முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கியாஸ் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story