சேலத்தில் மருந்து கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு

X

போலீசார் விசாரண
சேலம் அழகாபுரம் கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 65). இவர், சேலம் 4 ரோடு பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்றார். அப்போது, நியூ பேர்லாண்ட்ஸ் பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த 3 பேர் செல்லமுத்துவின் கவனத்தை திசை திருப்பி அவர் பையில் வைத்திருந்த ரூ.29 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவிடம் வழிப்பறி செய்த 3 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story