வார இறுதி நாட்கள், சித்திரை அமாவாசையை முன்னிட்டு

வார இறுதி நாட்கள், சித்திரை அமாவாசையை முன்னிட்டு
X
சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்கள் மற்றும் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சித்திரை அமாவாசையையொட்டி சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்தார்.
Next Story