உரிமம் பெறாத தனியார் மகளிர் விடுதிகள் மூடப்படும்

X

சேலம் கலெக்டர் எச்சரிக்கை
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் தனியார் மற்றும் தனிநபரால் நடத்தப்பட்டு வரும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெறவேண்டும். உரிமம் பெறுவதற்கு https:tnswp.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்ததப்படுகிறது. மாவட்டத்தில் தனியார் மகளிர் விடுதிகள், மகளிர் இல்லங்கள், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் பதிவு செய்யப்படாமல் இயங்குவது சட்டப்படி குற்றமாகும். மேலும் உரிமம் பெறாமல் இயங்குவது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிரந்தரமாக மூடப்படும். விண்ணப்பிப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Next Story