சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

X

சூரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை
பெரியார் பல்கலைகழக விதிமுறைகளை மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுன்டேசன் என்ற தனியார் அமைப்பை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உள்ளிட்ட நான்கு பேர் மீது, பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் அளித்தனர். சேலம் மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, புகார் அளித்தவரை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியது என வழக்கு பதிவு செய்து துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கில் துணை வேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமின் பெற்றதோடு, வழக்கு விசாரணைக்கு தடையானையும் பெற்றிருந்தார். இதனை எதிர்த்து மாநகர காவல்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தததால், தடையை நீக்கி காவல்துறை விசாரணை நடத்தவும், விரைவில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கிய மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் ரமலி ரமாலட்சுமி, இந்த வழக்கு தொடர்புடைய சாட்சிகளிடம் தனித்தனியாக சம்மன் அனுப்பி சாட்சிகளின் கருத்துகளை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக உதவி ஆணையர் ரமலி ராமலட்சுமி, முன்னிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் இன்று காலை 11 மணியளவில் நேரில் ஆஜராகினார். அவரிடம் உதவி ஆணையாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் வழக்கு தொடர்பான பல்வேறு கேள்விகளை கேட்டு அறிந்து அதனை வீடியோவில் பதிவு செய்தனர். காலை முதல் நடைபெற்று வரும் விசாரணை நாளையும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. வரும் திங்கட்கிழமை காலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
Next Story