ஏற்காடு சேர்வராயன் மலையில் மிளகு அறுவடை துவக்கம்

X

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கவலை
சேலம் ஏற்காடு சேர்வராயன் மலையில் மிளகு அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மிளகு செடிகள் சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலையில் 6,150 ஹெக்டரில் காபி பயிர்களோடு ஊடுபயிராக வளர்த்து வருகின்றனர். மார்ச் 15 முதல் மே 15க்குள் மிளகு அறுவடை செய்ய வேண்டி உள்ளதால் ஆண்கள் பற்றாகுறை காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது 3000 சிறு மற்றும் குரு விவசாயிகள் மிளகு அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் தரத்திற்கு ஏற்றவாறு மிளகு கிலோ ரூபாய் 680 முதல் 700 வரை வாங்கிச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story