தூம்பா வில் ஏசுவின் திரு உடலை இறை மக்களால் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக செல்லும் காட்சி

தூம்பா வில் ஏசுவின் திரு உடலை இறை மக்களால் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக செல்லும் காட்சி
X
வரலாற்று சிறப்பு மிக்க 96 பட்டிகளின் தாய் கிராமமான திண்டுக்கல் மேட்டுப்பட்டியின் 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா வின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான மலர்கள் மற்றும் தென்னை கீற்றுகளால் அழங்கரிக்கப்பட்ட தூம்பா வில் ஏசுவின் திரு உடலை இறை மக்களால் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக செல்லும் காட்சி
வரலாற்று சிறப்புமிக்க திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 96 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கக்கூடிய புனித வியாகுல அன்னை ஆலயத்தின் 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தூம்பா ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக கடந்த 20 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் பாஸ்கு திருவிழா துவங்கியது. 25 ஆம் தேதி பாடுகளின் பாஸ்கு இயேசு பிரான் தனது வாழ்நாளில் பட்ட பாடுகளை தத்ரூபமாக மனிதர்கள் நடித்துக் காட்டும் காட்சியானது அரங்கேறியது. இறுதியில் இயேசு மகான் இறந்தவுடன் மலர்கள் மற்றும் தென்னங்கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்ட தூம்பாவில் இயேசுவின் திருவுடலை வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக தூக்கிச் சென்று இறுதி அடக்கம் செய்யும் நிகழ்வு அனைவரையும் கண்கலங்க செய்தது.இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வும், 11 தேர்களில் உயிர் தாண்டவர் நகர் முழுவதும் வளம் வரும் நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.தற்போது தூம்பா ஊர்வலத்தில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் பங்கேற்றனர்.
Next Story