சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 

சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் 5லட்சம் நிதி வழங்கி ஆறுதல்
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.50 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாக மூட்டையை எடுத்துச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த செல்வராஜ் (29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் தமிழ்செல்வன் (11), கார்த்தி (11) ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (20) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 ரூ.லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் திமுக சார்பில் ரூ.2 லட்சம் மொத்தம் ரூ.5 லட்சம் வழங்கபடும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறுதல் தெரிவித்து தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னதாக, பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர் ராஜேந்திரன், மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, விபத்து நடைபெற்ற கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு,விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ.தேவி மீனாள் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story