சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்

X

வெற்றி பெற்ற 1,000 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தாண்டு வளாக நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் 450 மாணவ, மாணவிகள் தங்கள் இறுதி தேர்வுக்கு முன்பே ரூ.3 லட்சம் முதல் ரூ.8½ லட்சம் வரை சம்பளத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 1,000 பேருக்கு பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கி உள்ளனர். இதையடுத்து வளாக நேர்காணலில் வேலை வாய்ப்பு பெற்ற 1,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. பணி ஆணை பெற்ற மாணவ, மாணவிகளை, கல்லூரி தலைவர் வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய, மாநில அரசு, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் துறை நிறுவனங்கள் உதவியுடன் ஆண்டுதோறும் ரூ.2 கோடியே 10 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி கல்வித்தரம், வேலை வாய்ப்பு உறுதியை எடுத்துக்கூறும் நிகழ்வாக அமைந்து உள்ளது என்று கல்லூரி முதல்வர் கனகராஜ் தெரிவித்தார்.
Next Story