கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூரில் தற்போது செயல்படும் பேருந்து நிலையம் குறுகிய இடத்தில் செயல்படுவதால் விரிவான போக்குவரத்திற்கு ஏதுவாக கரூரை அடுத்த திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூபாய் சுமார் 40 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள், பொள்ளாச்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பணிகளை ஆய்வு செய்த பிறகு பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைவில் முடித்து தருமாறு அதிகாரிகளை பணித்தார்.
Next Story