சித்திரை அமாவாசை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சித்திரை அமாவாசை வே. முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவிலிலும் சித்திரை மாத அமாவாசை தினத்தையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி பகுதியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் என வெளி மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் பாதுகாப்பு பணியிடப்பட்டிருந்தனர் கோவை நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story