மூதாட்டியை சாலையில் படுக்க வைத்து பொதுமக்கள் தர்ணா

பாலக்கோடு அருகே வெள்ளி சந்தையில் மூதாட்டியை சாலையில் படுக்க வைத்து பொதுமக்கள் தர்ணா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் இவருக்கு வயது 90 இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக தன்னை கவனித்துக் கொள்ள முடியாமல் இருந்துள்ளார் இதனை அடுத்து அவரது மகள் வீட்டிலும் சிறிது காலம் இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு மூதாட்டியின் இளைய மகன் கோவிந்தன் தாயருக்கு சரிவர பணிவிடை செய்து கவனிக்க முடியாமல் பூத்துப்பட்டி கிராம சாலையில் பெட்டி படுக்கையுடன் இரவு நேரத்தில் சாலையின் வரும் விட்டுச் சென்றுள்ளார். தன்னை பார்த்துக்க ஆளில்லை என மூதாட்டி அழுத நிலையில் மறுநாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் மூதாட்டியை மீட்டு அவருக்கு உணவு அளித்து பார்த்து வந்த நிலையில், மூதாட்டியின் வேண்டுகோள் படி ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூதாட்டியை பிள்ளைகளிடம் சேர்க்குமாறு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவலர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத அதை எடுத்து நேற்று ஏப்ரல் 27 மாலை வெள்ளி சந்தை பகுதியில் அவரை படுக்கையுடன் தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவலர்கள் குடும்பத்தினருடன் மூதாட்டியை ஒப்படைப்பதாக உறுதியளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story