ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்.

தர்மபுரி அருகே இண்டூர் பகுதியில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 75 ஜே.சி.பி. வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஜே.சி.பி. வாகனங்கள் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் ஜே.சி.பி. வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர் . இந்த நிலையில் ஜே.சி.பி. வாகனத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றால் குறைந்த பட்ச வாடகை ரூ.3000 வழங்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1300 கட்டணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற 1-ம் தேதி வரை 5 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் எங்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஜே.சி.பி. உரிமையாளர்கள் தர்மபுரி அருகே நத்தஅள்ளி காளியம்மன் கோவில் அருகில் தங்களது வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக டிரைவர்கள், உதவியாளர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இவர்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Next Story