ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது கல்குவாரி உரிமையாளர்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும்,கரூர் அமராவதி ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு 2- பள்ளி மாணவர்கள் புதை குழியில் சிக்கி உயிரிழந்தனர். இதுபோன்ற இழப்புகளை தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.
Next Story