மே தின கிராம சபை கூட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இ எஸ் ஐ மருத்துவ காப்பீடு- ஆட்சியரிடம் மனு.

மே தின கிராம சபை கூட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இ எஸ் ஐ மருத்துவ காப்பீடு- ஆட்சியரிடம் மனு.
மே தின கிராம சபை கூட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இ எஸ் ஐ மருத்துவ காப்பீடு- ஆட்சியரிடம் மனு. வாரம்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்க ஆலோசகர் ராஜசேகர் தலைமையில் வந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த அவர், கரூர் மாவட்டத்தில் மே 1-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு வழங்கிட வலியுறுத்தி மனு அளித்ததாகவும், அனைத்து ஊராட்சிகளிலும் மே தின கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிட ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததாக தெரிவித்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
Next Story