விழா கடைகளுக்கு அதிக சுங்க கட்டணம் வியாபாரிகள் கவலை

அதியமான் கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா கடைகளுக்கு அதிக வாடகை வசூலிப்பதாக புகார்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் கடந்த மாதம் 28ம் தேதி காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. கோயில் திருவிழாவை ஒட்டி மகா ரதம் எனும் காளியம்மன் கோயில் தேர் திருவிழா நடந்தது. விழாவில் அதியமான் கோட்டை நல்லம்பள்ளி லலிகம் தேவரசம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காளியம்மனை வழிபட்டனர். விழாவை ஒட்டி கோயிலுக்கு சொந்தமான இடத்திலும் தனியாருக்கு சொந்தமான இடத்திலும் திருவிழா கடைகள் 15 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டும் 70-க்கும் மேற்பட்ட கடைகள் கோவில் திருவிழாவை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருவிழா முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் திருவிழா கடைகளுக்கு அதிக சுங்க கட்டணம் கேட்பதாக புகார் எழுந்தது. இது குறித்து திருவிழா கடை உரிமையாளர்கள் கூறும்போது கடந்த ஆண்டு ரூ.நாலாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை கட்டி உள்ளோம் ஆனால் நடப்பாண்டில் அதே இடத்திற்கு பல மடங்கு ரூபாய் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வாடகை கேட்கின்றனர். இல்லையென்றால் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விழா முடிய இன்னும் ஒரு சில நாட்களை உள்ளதால் நல்லம்பள்ளி பீடிஓ அதிகாரிகள் நேரில் வந்து திருவிழா கடைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் வரன்முறை படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்...
Next Story