தி.மு.க., தண்ணீர் பந்தல் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு

தி.மு.க., தண்ணீர் பந்தல் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு
X
ஸ்ரீபெரும்புதுார் நகர தி.மு.க., சார்பில், ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தமிழகம் முழுதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பொதுமக்களின் தாகத்தை தீர்கும் வகையில், தி.மு.க., சார்பில் ஆங்காங்க தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினர். அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் நகர தி.மு.க., சார்பில், ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் நகர கழக செயலர் சத்தீஸ்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய செயலர் கோபால், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக் குழு தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்து, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கினர். இதில், ஸ்ரீபெரும்புதுார் நகர தலைவர் சாந்தி, நகர துணை தலைவர் இந்திராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story