கரூர் அருகே சர்வீஸ் பார்த்த காரை ட்ரையல் பார்த்தபோது தீ விபத்து. கார் முற்றிலும் எரிந்து நாசம்.

கரூர் அருகே சர்வீஸ் பார்த்த காரை ட்ரையல் பார்த்தபோது தீ விபத்து. கார் முற்றிலும் எரிந்து நாசம்.
கரூர் அருகே சர்வீஸ் பார்த்த காரை ட்ரையல் பார்த்தபோது தீ விபத்து. கார் முற்றிலும் எரிந்து நாசம். கரூர் குளத்து பாளையத்தைச் சேர்ந்தவர் தனது காரை சர்வீஸுக்காக வெண்ணைமலை மேம்பாலம் அருகே உள்ள கடையில் விட்டுள்ளார். காரில் உள்ள பழுத நீக்கப்பட்டு சர்வீஸ் முடிந்த பிறகு அருகிலுள்ள வெண்ணைமலை மேம்பாலம் சர்வீஸ் சாலையில் காரை பழுது பார்த்த மெக்கானிக் ட்ரையல் பார்த்துள்ளார். கம்பெனியில் இருந்து சிறிது தூரம் சென்ற உடனேயே காரின் முன் பகுதியில் திடீரென தீ பற்றியது. கீழே இறங்கி பார்ப்பதற்குள்ளாக தீ மல மலவென பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆயினும் அதற்குள்ளாக கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரை ட்ரையல் பார்க்க வந்த இடத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமான விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story