விபத்துக்களை தவிர்க்க தரைப் பாலத்தை சீரமைத்த பொதுமக்கள்

விபத்துக்களை தவிர்க்க தரைப் பாலத்தை சீரமைத்த பொதுமக்கள்
X
தாராபுரத்தில் விபத்துக்களை தவிர்க்க தரைப் பாலத்தை சீரமைத்த பொதுமக்கள்
தாராபுரம் ராஜ வாய்க்கால் தரைபாலம் முற்றிலுமாக சேதம் அடைந்து பாலத்தில் உள்ள கம்பிகள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த தரைப்பாலத்தில் கால்நடைகள் தவறி விழுந்துள்ளதாகவும், இரு சக்கர வாகனத் தில் சென்றவர்கள் தவறி ராஜ வாய்க்காலில் விழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே தரைப் பாலத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இது போன்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக அந்தத் தரை பாலத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் அந்தப் பாலத்தின் ஓரத்திற்கு மண் கொட்டி தரை பாலத்தை சீரமைத்து வருகின்றனர்.
Next Story