பல்லடம் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

X

பல்லடம் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்து சேதம் பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் சொந்த வேலை காரணமாக தனது சொகுசு காரில் வடுகபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சென்று விட்டு மீண்டும் வடுகபாளையம் வந்து கொண்டிருந்தார். பொள்ளாச்சி சாலை வெங்கிட்டாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து கரும் புகை வந்துள்ளது.இதனால் காரை நிறுத்தியுள்ளார்.அதனை தொடர்ந்து காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன் உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளார்.காரின் முன் பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் பரவி எரிய தொடங்கியது.இந்த விபத்தினை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.இந்த விபத்தின் காரணமாக பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story