தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை

தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை
X
வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை காவல்துறை விசாரணை
வெள்ளகோவில் குமாரவலசை சேர்ந் தவர் சிவசுந்தரம் (வயது 78). இவர் தனது வீட்டு அருகில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமண மாகி ராணி (வயது 70) என்ற மனைவியும் பாலசுப்பிரமணியன் (வயது 41) என்ற திருமணமான மகனும் உள்ளனர். சிவசுந்தரம் கடந்த பல மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மனமுடைந்து காணப்பட்ட அவர் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சிவசுந்தரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் எஸ். ஞானப்பிரகாசம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story