நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மழலைச் செல்வங்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது | King news 24x7

நவோதய பள்ளி நாமக்கல்
நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மழலைச் செல்வங்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று 05.06.2025 வியாழக்கிழமை பள்ளி கலையரங்கத்ததில் (2025 - 2026) ஆம் கல்வியாண்டில் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள PRE KG மற்றும் LKG மழலைச் செல்வங்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி முதல்வர் திரு. ஆண்டனி ராஐ அவர்கள் வரவேற்றார். பள்ளியின் பொருளாளர் திரு. கா. தேனருவி அவர்கள் தலைமை ஏற்று விழாவை நடத்தினார்கள். அவர் குழந்தைகளை வாழ்த்தி பேசுகையில் “ஒரு குழந்தைக்கு அடிப்படையாக தேவையான ஒன்று ஒழுக்கம் அதை நாங்கள் உயிராக நினைத்து மாணவர்களுக்கு முதன்மையாக கற்றுத் தருகின்றோம். மேலும் ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித் திறமை உண்டு அதைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி சாதனை செய்ய வைப்பதே எங்கள் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்னால் பேசும் போது வன்முறை இல்லாத வார்த்தைகளை பேசிப் பழகினால் நல்ல தலைமுறைகளை நம்மால் உருவாக்க முடியும்” என்று கூறினார். சிறப்பு பூஜை நடைபெற்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் அமரவைத்து குழந்தைகளின் வலது கை ஆட்காட்டி விரல் பிடித்து “அ” என்ற உயிரெழுத்தை எழுத வைத்தனர். மேலும் இந்து, இஸ்லாம், கிறுத்துவ ஆகிய மூன்று மதத்தலைவர்களும் குழந்தைச் செல்வங்களை வாழ்த்தினார்கள். பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், மற்றும் பள்ளியின் பணியாளர்கள் அனைவரும் அனைத்து குழந்தைகளுக்கு பூக்களை தலையில் இட்டு ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார்கள், குழந்தைகளுக்கு நிகழ்ச்சியின் நிறைவில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நாட்டுப்பண் இசைக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.