ராசிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..

ராசிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..
X
ராசிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..
தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் நடிகர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாவட்ட செயலாளர் JJ செந்தில்நாதன், அவர்கள் தலைமையில் ராசிபுரம் ஆத்தூர் சாலை காமாட்சி அம்மன் கோவில் சாவடி அருகில் விழா ஏற்பாடு செய்திருந்தனர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் கேக் வெட்டி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கேக், இனிப்புகள், குஸ்கா, முட்டை, கேசரி உள்ளிட்டவை வழங்கி சிறப்பித்தனர். மேலும் பெண் குழந்தை ஒருவருக்கு மருத்துவ செலவுக்காக மாவட்ட செயலாளர் JJ. செந்தில்நாதன் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அந்த குழந்தைக்கு புத்தாடையும் வழங்கி சிறப்பித்தனர். மேலும் இதே போல் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே ராசிபுரம் நகர தலைமை சார்பாக கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் ,ரசிகர் மன்ற நிர்வாகிகள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட கொண்டனர்.
Next Story