மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி


குமாரபாளையத்தில் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குமாரபாளையத்தில் நேற்று காலை முதல் வெயில் அதிகமாக இருந்தது. விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் இருந்தது. வழக்கமான சாலையோர கடைகளை விட ஞாயிறன்று அதிக சாலையோர கடைகள் அமைப்பது வியாபாரிகளுக்கு வழக்கம். நேற்று மாலை 04:00 மணியளவில் கன மழை பெய்தது. இது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில், பஸ் எதிரில் உள்ள கோம்பு பள்ளத்தில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. ஒரு நாள் வியாபாரத்தை நம்பி சாலையோரம் கடை போட்ட வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். குளிர்ச்சியான சூழ்நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story