தாராபுரத்தில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தாராபுரத்தில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X
தாராபுரத்தில் தமிழக வெற்றி கழக நகர இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நகர இளைஞரணி அமைப்பாளர் அபுதாஹிர் தலைமையில் தளபதி விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ்,கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக்பரித், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர், ராம்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நகர இளைஞரணி சார்பாக தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு 5,000/- கல்வி ஊக்க தொகையும், வயதான பெண்மணிக்கு சமையல் எரிவாயு அடுப்பு, பள்ளி மாணவருக்கு நோட் புக் வழங்கினர். முன்னதாக அலங்கியம் சாலையில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் அங்கு வசிக்கும் ஆதரவற்ற நிலையில் இருந்த 30 முதியோர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
Next Story