குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிக்கை

மதுரை மேலூர் சிவன் கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
மதுரை - மேலூரில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு வரும் சூலை-2ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இன்று 23.6.2025 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை, வீரத்தமிழர் முன்னணி சார்பில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குட முழுக்கு நன்னீராட்டு விழாவை தமிழில் நடத்தக் கோரி மேலூர் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் மதுரை அமைப்பாளர் கதிர் நிலவன் அவர்கள் தலைமையில், ஆதினம் குச்சனூர் கிழார் ( வடகுரு மடாதிபதி இராச யோக சித்தர் பீடம்) அவர்கள் கோரிக்கை மனுவை இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் அளித்து தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு வேண்டிக் கொண்டார். இது போல் மதன் (மேலூர் பொறுப்பாளர், வீரத்தமிழர் முன்னணி, ) அவர்களும், கேசம் பட்டி ஜீவா (தமிழர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ) அவர்களும் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் மணிக்குமார், சாமிக்கண்ணு, கதிரவன் , சுரேஷ் வேலாயுதம், சத்தியப்பிரகாஷ், தீபக் பிரகலாதன் , வன்னி ராஜா, பூவலிங்கம் குரு , தமிழர் மக்கள் இயக்கம் தோழர்கள் தங்க அடைக்கன், சூர்யா,செல்வம் அரவிந்த், பெருமாள் மற்றும் தியாகலிங்கம் ( தமிழ்த் தேசியப் பேரியக்கம்) , அரிட்டாபட்டி விமலா, அமுதா ( மக்கள் பாதை பேரியக்கம்), பார்த்திபன், மின்னல் வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறும்போது வேள்விச் சாலை, கருவறை, கோபுர கலசம் மூன்றிலும் பிராமணர் அல்லாத தமிழ் வேத அர்ச்சகர்களை அமர்த்தி தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்று கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.
Next Story